தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிங்க் அக்டோபர்: ஜொலிக்கும் மலைக்கோட்டை விழிப்புணர்வின் அடையாளம்

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மலைக்கோட்டை பிங்க் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் மலைக்கோட்டை
பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் மலைக்கோட்டை

By

Published : Oct 2, 2021, 12:35 AM IST

திருச்சி: ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனை சார்பில் ஆண்டுதோறும் 'பிங்க் அக்டோபர்' என்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை இரவு நேரங்களில் பிங்க் நிற மின்னொளியில் ஜொலிக்கும். அதோடு திருச்சி முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்த இரு நிகழ்வுகளை திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி சருக்குபாறை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சுகாதாரத் துறை இணை இயக்குனர் சுதர்சன், உதவி இயக்குனர் விஜயராணி முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் கூறுகையில்,
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் உலக சுகாதார மையத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஆண்டு தோறும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் உயர் சிறப்பு மருத்துவமனையின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மலைக்கோட்டையை பிங்க் வண்ண விளக்குகளால் அலங்கரித்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான இந்த பிங்க் அக்டோபரில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இந்த முயற்சியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த மூன்று ஆண்டுகளாக எடுத்து வருகிறது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு விளம்பர வாகனம் திருச்சி முழுவதும் சுற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும். மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்.

1. மார்பகத்தில் வலியில்லாத நாள்பட்ட சிறிய கட்டி.

2. தோலின் மேல்பகுதி தடித்து காணப்படுதல்.

3. மார்பக காம்புகளில் நீண்டநாள் ஆறாத புண் மற்றும் இரத்தம் கலந்த நீர் அல்லது சீழ் வடிதல் , இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனே மருத்தவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும், எந்த ஒரு அறிகுறியும் இல்லையென்றாலும் கூட 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமறை மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இவ்வாறு மேமோகிராம் செய்துகொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயினை மிக ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து மிக எளிதில் குணப்படுத்தி விடலாம். உயிர் சேதமோ அல்லது மார்பகத்தை எடுக்கும் சூழ்நிலையோ ஏற்படாது.

மேமோகிராம் என்பது உடலுக்கு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத 10 நிமிட எளிய பரிசோதனை ஆகும். இப்பரிசோதனையை 50% சலுகை விலையில் அக்டோபர் மாதம் முழுவதும் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். அன்பான அன்னைக்கு மேமோகிராம் எடுத்தால் அழகான ஸ்கூட்டி உங்களுக்கு என்ற குலுக்கல் பரிசு திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. படித்தவர்கள், படிக்காதவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்.

மேமோகிராம் பரிசோதனையை 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். பரிசோதனை செய்து கொண்ட ரிசல்டை எங்களது மருத்துவமனையில் 7373652777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவுசெய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்கள் அனைவரையும் வரவழைத்து ஒரு விழா ஏற்பாடு செய்து ஒரு விஜபி மூலம் பொது குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படும் அதிஷ்டசாலிக்கு பிங்க் ஸ்கூட்டி பரிசாக கிடைக்கும். பதிவு தொடங்கும் நாள் 01.10.2021. பதிவு முடியும் நாள் 31.10.2021. ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் 50% விலை தள்ளுபடியில் மேமோகிராம் எடுக்கிறோம்.

விஞ்ஞானம் வளர்ந்த காலத்திலும் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பலரை வியாதி முற்றிய நிலையில் காப்பாற்ற முடியாமல் போகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களோடு கைகோர்த்து மார்பக புற்றுநோய் என்பதை முழுவதுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க:10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் - அக்டோபர் 4ஆம் தேதி வழங்க முடிவு

ABOUT THE AUTHOR

...view details