கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகளும், தன்னார்வலர்களும் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அம்மா உணவகம், காவல் காவல் நிலையம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சித்தா பிரிவு மருத்துவர் கல்பனா, காவல் ஆய்வாளர் கண்ணதாசன், மக்கள் நீதி மையம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 144 தடை உத்தரவில் பணியாற்றும் காவலர்கள், நகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.