திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், சமயபுரம் எல்லையில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் லாட்டரி விற்பனை செய்த சமயபுரம் சக்தி நகரைச் சேர்ந்த சேகர் (43), மாகாளிக்குடி வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வாசு (42) ஆகியோரை கைது செய்தனர்.