தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ஆக்சிஜன் வாயு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து - Trichy

திருச்சியில் ஆக்சிஜன் வாயு ஏற்றி வந்த லாரி மதுரை - தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.

திருச்சியில் ஆக்சிஜன் வாயு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!
திருச்சியில் ஆக்சிஜன் வாயு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!

By

Published : Jan 9, 2023, 11:57 AM IST

திருச்சி:நாகர்கோவிலில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவு தளத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜன் வாயு லாரி மூலம் புதுச்சேரியில் இருந்து கொண்டு எடுத்து செல்லப்பட்டது. இந்த லாரியை கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ கணபதி என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் லாரி, திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் சோதனைச்சாவடி பகுதியில் இருந்த தடுப்புகள் மீது மோதியது.

இதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் காயமடைந்தார். அவரை உடனடியாக அங்கிருந்த காவல் துறையினர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியில் இருந்த டீசல் சாலை முழுவதும் கொட்டியது. ஆனால் நல்வாய்ப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் எந்த சேதமும் ஏற்படாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா கம்பங்கள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரியில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை எடுப்பதற்காக பாண்டிச்சேரியில் இருந்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடக்கும் லாரி, கிரேன் உதவியுடன் மீட்டு அப்புறப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை கார் பந்தய விபத்து.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details