திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சென்ற லாரி ஒன்று, தாழ்வான மின்கம்பியில் உரசியதால் மினி லாரியிலிருந்த சோள தட்டை தீப்பிடித்து ஏரிந்தது.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், மின்னல் வேகத்தில் செயல்பட தொடங்கினர். அவர்கள் துரிதமாக செயல்பட்டு லாரி சேதம் அடையாமல் பத்திரமாக மீட்டனர்.