திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்புரத்தினம். இவரது மகன் கார்த்திக்கேயன் (29) திருமணம் ஆகாதவர். இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் இன்று மாலை பணி நிமித்தமாக கலைஞர் அறிவாலயம் பகுதியில் இருந்து திருச்சி & கரூர் பைபாஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் தருமபுரியில் இருந்து டைல்ஸ் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி அதே சாலையில் வந்து கொண்டிருந்தது.
கோஹினூர் தியேட்டர் சிக்னல் அருகே லாரியை அப்பகுதியில் நின்ற காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் லாரியை டிரைவர் வேகமாக ஓட்டினார். இதில் முன்னால் சென்ற கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.