மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். குழந்தையை மீட்கும் பணி ஏழு மணிநேரத்திற்கும் மேல் நடைபெற்று வரும் நிலையில், குழந்தை சுஜித்துடன் அவருடைய தாயார் பேசியிருக்கிறார். அழுகாத சாமி.. அம்மா இருக்கிறேன்... உன்னை மேல எடுத்துறேன் என்ற தாயின் தன்னம்பிக்கை குரலை கேட்ட சுஜித் ம்.. ம்.. என்று பதிலளித்துள்ளார்.
live updates: தற்போதைய பிரார்த்தனை சுர்ஜித்துக்கானது
திருச்சி: மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் கண்டுபிடித்த தனித்துவமான கருவி மூலம் நடந்து வந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டதால், மீண்டும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது
தற்போதைய பிரார்த்தனை சுஜுத்கானது
இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் கண்டுபிடித்த தனித்துவமான கருவி மூலம் நடந்து வந்த பணியில் சில சிக்கல் ஏற்பட்டதால், மீண்டும் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல பல்வேறு இடங்களிலும் வாழும் மக்கள் சுர்ஜித், மீண்டு(ம்) வர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர்.
Last Updated : Oct 26, 2019, 1:48 PM IST