திருச்சி : துறையூர் உப்பிலியபுரம் ஊராட்சி ஆங்கியம் கிராமத்தில் ஆங்கியம் கரடு என அழைக்கப்படும் வனப்பகுதி உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஹரி பாஸ்கரன் என்பவர் அங்கு செல்பி எடுப்பதற்காக சென்றுள்ளார். குகையின் முன்பு நின்று செல்பி எடுக்கும் பொழுது எதிர்பாராத விதமாக குழிக்குள் இருந்த சிறுத்தை அவரை தாக்கியுள்ளது.
இதனைக் கண்ட விவசாயி துரைசாமி என்பவர், ஹரிபாஸ்கரனை காப்பாற்ற முயன்ற போது, அவரையும் சிறுத்தை தாக்கிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த ஹரி பாஸ்கரன், துரைசாமி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக தாத்தையங்கார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி அருகே சிறுத்தை தாக்கி இருவர் படுகாயம் - leopard
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிறுத்தை தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

திருச்சி அருகே சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம்
இதனையடுத்து வனப்பகுதிக்கு சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக இருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :மின் தடை - எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு