திருச்சி:திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மணிவாசகன். இவரிடம் பல்வேறு குடும்ப நல வழக்குகள், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த வழக்குகள் விசாரணைக்கு வரும்.
இந்த வழக்குகளை மணிவாசகன் முறையாக விசாரணை செய்யாமல் எல்லா வழக்குகளிலும் பெண்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்குவதாகவும், தொடர்ந்து அவரிடம் வரும் வழக்குகளில் பெண்களுக்கு எதிராகவும், ஆண்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் எனவும் ஏற்கெனவே இவர் மீது புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.