திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பு சார்பில் மண்டல தலைவர்களின் முதலாவது மாநாடு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அதன் நிறுவன தலைவர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.
மேலும் திருச்சி மாவட்ட தலைவர் மாக்சிம் கார்த்தி, மண்டல தலைவர் பிரான்சிஸ் லியோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் செந்தில் குமார் தெரிவித்ததாவது, "தமிழ்நாடு வணிகர்களின் சங்கம் என்ற அமைப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் அமைப்பு தற்போது இதில் 22 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் வழக்கறிஞர் அணி, மாற்றுத்திறனாளி அணி, மருத்துவர் அணி, மகளிர் அணி என 11 அணிகள் உள்ளன. இதில் எலக்ட்ரீசியன், பிளம்பர், தட்சர் உள்ளிட்ட தொழில் புரிபவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. வணிகர்களுக்கு தற்போது தொழில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
டிஜிட்டல் வணிகம் சிறு, குறு வணிகர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இடைத்தரகர் இல்லாமல் சிறு, குறு வணிகர்களை உற்பத்தி பொருள்கள் சென்று அடையும் வகையில் பிரத்யேக இ.மார்ட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2021: வங்கிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மூலதனம்: வாராக்கடன் வங்கி அமைப்பு?