தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்கள் மீது வயதான தம்பதி நில அபகரிப்பு புகார்! - காவலர்கள் மீது நில அபகரிப்பு புகார்

நிலத்தை அபகரித்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி ஐஜியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

காவலர்கள் மீது நில அபகரிப்பு புகார்
காவலர்கள் மீது நில அபகரிப்பு புகார்

By

Published : Jan 11, 2022, 7:30 PM IST

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த வடக்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். அகில இந்திய வானொலி நிறுவன ஓய்வுபெற்றஊழியர். இவர் தனது மனைவியுடன் பூர்விக இடத்தில் வீடுகட்டி வசித்துவருகிறார்.

அவரது வீட்டின் அருகே வசித்துவருபவர் சுப்ரமணியன். காவல் துறையில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் பூங்கொடி, மகன் செந்தமிழ்செல்வன் ஆகியோரும் காவல் துறையில் பணியாற்றிவருகின்றனர்.

தியாகராஜன் வயதானவர் என்பதால் இவரது இடத்தை காவலர் சுப்ரமணியன் ஆக்கிரமிப்பு செய்து 20 ஆண்டுகளாக வைத்துள்ளார்.

காவலர்கள் மீது நில அபகரிப்பு புகார்

தங்களுக்குச் சொந்தமாக இருக்கும் ஒரு ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத்தரக் கோரி வயதான தம்பதி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து தியாகராஜன் கூறியதாவது, "இடத்தை தங்களுக்கு ஒப்படைக்ககோரி ஆட்களைக் கொண்டு அடித்து துன்புறுத்துகின்றனர். காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அவர்களும் அங்கு பணிபுரிவதால் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

அதுமட்டுமன்றி ஊர் மக்களையும் எங்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, ஊருக்குள் இருக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்படும் டிஎன்பிஎஸ்சி விடைத் தாள்கள்

ABOUT THE AUTHOR

...view details