தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை - நடந்தது என்ன? - லலிதா ஜுவல்லரி

திருச்சி : லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் கிரண் குமார் தெரிவித்தார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/02-October-2019/4628964_lalaitha.jpg

By

Published : Oct 2, 2019, 11:31 PM IST

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ரூ. 13 கோடி மதிப்புள்ள தங்கம், பிளாட்டினம், வைர நகைகள் என 700 முதல் 800 எண்ணிக்கையில் ஆன பொருட்கள் களவு போனதாக கடை உரிமையாளர் கிரண்குமார் தெரிவித்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரியில் மர்ம நபர்கள் நேற்று இரவு சுவற்றில் ஓட்டை போட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும், கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ’கடையின் முதல் தளத்தில் இருந்த 700 முதல் 800 வகையான தங்கம், வைரம், பிளாட்டினம் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு மொத்தம் 13 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. நாங்கள் கூறுவது தான் உண்மையான மதிப்பு. இதுதான் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

மேலும், அவர்களது கைகள் கூட வெளியில் தெரியவில்லை. கடையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் நல்ல முறையில் வேலை செய்கின்றன. அதில் அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளன. சுவர் பலவீனமாக இருந்தது என்று கூறமுடியாது. தரை தளத்தில் இருந்த நகைகள் மட்டுமே திருடு போயுள்ளது. முதல் தளத்தில் இருந்த நகைகள் எதுவும் திருடு போகவில்லை. போலீசார் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றனர். கொள்ளையர்களை விரைவில் பிடித்து களவுபோன நகைகளை
மீட்டு தருவார்கள் என நம்பிக்கை உள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க:

ரூ 7.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் நகைகள் பறிமுதல்...

ABOUT THE AUTHOR

...view details