தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: திருவாரூர் முருகன் கொள்ளை கும்பலின் தலைவனா? - திருச்சி காவல்துறையினர் விசாரணை

திருச்சி: தேசிய அளவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட திருவாரூர் முருகன், லலிதா ஜுவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்குத் தலைவனாக இருக்க வாய்ப்புள்ளதா என தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு

By

Published : Oct 4, 2019, 2:57 PM IST

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருச்சி தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தப்பித்து ஓட முயற்ச்சித்தனர்.

அவர்களில் பிடிபட்ட மணிகண்டனிடம் நடத்திய சோதனையில் அவரிடம் லலிதா ஜுவல்லரியின் எம்பளம் பொறிக்கப்பட்ட நான்கு கிலோ 800 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தப்பி ஓடிய சீராதோப்பை சேர்ந்த சுரேஷின் உறவினர்களான ரவி ,மாரியப்பன், குணா ஆகியோரை திருச்சி தனிப்படை காவல் துறையினர் கைது செய்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவர் இந்த கொள்ளை கும்பலுக்குத் தலைவன் என கூறப்படுகிறது. இவர் வங்கி, ஏஎடிஎம்களில் பல கொள்ளைச் சம்பங்களில் ஈடுபட்டவர்.

எய்ட்ஸ் நோயாளியான இவர் தான் கொள்ளையடித்த பணம், நகை ஆகியவற்றை தன் குடியிருப்புக்கு அருகில் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவார் இவர் மனாசா வினாவா என்ற திரைப்படத்தை தயாரித்ததாகவும் ஆனால் அந்த படம் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் திருச்சி காவல்துறை சார்பில் ஏழு தனிப்படைகளும், திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு பிடிபட்ட மணிகண்டனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிர சோதனையும் விசாரணையும் நடைபெற்று செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்க:
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு: மேலும் மூவரிடம் ரகசிய விசாரணை

ABOUT THE AUTHOR

...view details