திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிபாளையம் மேற்கு குறும்பர் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் சோலை ஈஸ்வரி (44). இவர்களது மகன்கள் துர்கேஷ் (8), நித்திஷ் (7). 2019 டிசம்பர் 22ஆம் தேதி ஈஸ்வரி, இரு மகன்கள் திடீரென மாயமாகினர். அவர்களைக் கண்டுபிடித்து தரக்கோரி செல்வராஜ் உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
புகாரளித்து ஓராண்டாகியும் காணாமல்போனவர்களைக் காவல் துறையினர் கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து விசாரிப்பதற்காக செல்வராஜ் இன்று காலை 7.30 மணியளவில் உப்பிலியாபுரம் காவல் நிலையம் வந்தார். அப்போது பெரும்பாலான காவல் அலுவலர்கள் வீரப்பூர் திருவிழா பாதுகாப்பிற்குச் சென்றுவிட்டனர்.