தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்தேஸ்வரர் கோவில்: தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு - kovil pooja in sideshwar temple thirukattupalli

திருச்சி: திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம் பூண்டியிலுள்ள சித்தேஸ்வரர் கோயில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

By

Published : Nov 14, 2020, 5:48 PM IST

திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம் பூண்டியில் சித்தாம்பிகை சமேத சித்தேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் யுனெஸ்கோவின் மேற்பார்வையில் உள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சுவாமிக்கு திரவிய பொடி, பால், தயிர், தேன், இளநீர், பஞ்சகவியம் என அனைத்து அபிஷேகப் பொருள்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். அபிஷேக ஏற்பாடுகளை சபரீஸ்வரன் சிவாச்சாரியார் மேற்கொண்டார்.

இதையும் படிங்க...தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details