தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு வழக்கு... எடப்பாடி பயப்பட அவசியமில்லை - டிடிவி தினகரன் - admk

கோடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் எடப்பாடி பழனிசாமி எந்த தவறும் செய்யவில்லை என்றால் பயப்பட வேண்டிய அவசியமில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

எடப்பாடி குறித்து டிடிவி பேச்சு
எடப்பாடி குறித்து டிடிவி பேச்சு

By

Published : Sep 1, 2021, 5:07 PM IST

திருச்சி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து கொள்ளை முயற்சி, கொலை வழக்கில் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் கனகராஜுக்கும் தொடர்பு இருந்தது.

ஆனால் அவர் சேலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் உயிரிழந்த 24 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சயானும் சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது மகளும், மனைவியும் உயிரிழந்தனர்.

வழக்கில் தொடர்புடையவர்கள் சினிமா பாணியில் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியது மக்களிடையே சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பழனிசாமி குற்றச்சாட்டு

சூழல் இப்படி இருக்க முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு வழக்கில் தன்னையும் சேர்க்க சதி நடப்பதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டினார். ஆனால், கோடநாடு விவகாரத்தில் பழனிசாமி எதற்காக அதீத பதற்றமடைகிறார் என அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், திருச்சி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது " சட்டப்பேரவையில் நதியினில் வெள்ளம் எனக் கூறி ஓபிஎஸ் பேசியது குறித்து எனக்கு தெரியாது. எந்த அர்த்தத்தில் கூறினார் என்றும் தெரியவில்லை. இது பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.

சசிகலா தொண்டர்களைச் சந்திப்பார்

கோடநாடு வழக்கில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி பயப்பட வேண்டிய அவசியமில்லை. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை. ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையற்றது. சசிகலா தொண்டர்களைச் சந்திப்பார். அவர் வரும்போது, அவருடைய திட்டம் குறித்து கேட்டுக்கொள்ளுங்கள்" என்றார்.

இதையும் படிங்க:கொடநாடு வழக்கை திசை திருப்புகிறார்கள் - எடப்பாடி பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details