திமுகவின் முன்னாள் அமைச்சரும் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான ரகுமான் கான் மாரடைப்பு காரணமாக இன்று (ஆக.20) காலை உயிரிழந்தார்.
முன்னாள் அமைச்சர் ரகுமான் கானுக்கு மலர் அஞ்சலி செலுத்திய கே.என்.நேரு - முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு மலர் அஞ்சலி
திருச்சி: மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான் கானுக்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார்.
KN Nehru pays floral tributes to former minister Raghuman Khan
இதையடுத்து திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சரும், உயர்மட்டக்குழு உறுப்பினருமான மறைந்த ரகுமான் கான் திருவுருவப் படத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் என நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.