கரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி, உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளான திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜெ. அன்பழகனுக்கு திருச்சியில் கே.என்.நேரு அஞ்சலி! - j anbalagan died
திருச்சி: மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு திருச்சியில் கே.என்.நேரு அஞ்சலி செலுத்தினார்.
![ஜெ. அன்பழகனுக்கு திருச்சியில் கே.என்.நேரு அஞ்சலி! trichy kn nehru pay homeage to j anbalagan ஜெ அன்பழகன் திமுக கே என் நேரு அன்பழகனுக்கு அஞ்சலி j anbalagan died kn nehru homage](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:52-tn-tri-03-nehru-homeage-script-photo-7202533-10062020145058-1006f-1591780858-1077.jpg)
ஜெ. அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்திய நேரு
இந்நிலையில், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, ஜெ. அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
ஜெ. அன்பழகன் மறைவையடுத்து திமுக சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.