அப்போது செய்தியாளகர்களை சந்தித்த கி.வீரமணி, “கடந்த ஆறு மாத காலமாக அமைச்சர்கள் யாகம் செய்து வருகிறார்கள். ஆனால் எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை. யாகம் வளர்த்தால் மழை பெய்யும் என்றால் எல்லா இடத்திலும் நடத்த வேண்டியதுதானே. ஒருபுறம் யாகத்தையும் நடத்திக் கொண்டு, மற்றொரு புறம் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவேன் என்கிறார்கள்.
‘அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாகம் நடத்துகிறார்களா?’ - கி. வீரமணி கேள்வி - இஸ்லாம்
திருச்சி: இஸ்லாமிய ஆராய்ச்சி மையத் தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார்.
File pic
இது ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது. முதலமைச்சர் உட்பட அனைத்து அமைச்சர்களும் யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்கள் தனிப்பட்ட முறையில் நடத்துகிறார்களா என்பது தெரியவில்லை. அண்ணா பெயரில் தொடங்கிய கட்சியின் கொள்ளை தற்போது காற்றில் பறக்கிறது” என்றார்.