ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக குறுவைக்கு மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
காவிரி மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் - விவசாயிகள்
திருச்சி: குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்காததைக் கண்டித்து காவிரி மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
File pic
அந்த வகையில் இந்த ஆண்டும் (ஜூன் 12ஆம் தேதியான இன்றும்) காவிரியில் தண்ணீர் திறக்கவில்லை. இதைக் கண்டிக்கும் வகையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஓயாமரி சுடுகாடு எதிரே காவிரி ஆற்றின் மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சிறுநீரைக் குடிக்கும் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர். இப்போரட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.