தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடு உள்ளவரை கருணாநிதி புகழை மறக்க முடியாது: கே.என். நேரு புகழாரம் - KN praises Karunanidhi Nehru

திருச்சி: இந்த நாடு இருக்கும்வரை கருணாநிதியின் புகழை மறக்க முடியாது என்று கே.என். நேரு புகழாரம் சூட்டினார்.

கருணாநிதியின் உருவப்படத்திற்க்கு கே.என். நேரு மலர்தூவும் காட்சி
கருணாநிதியின் உருவப்படத்திற்க்கு கே.என். நேரு மலர்தூவும் காட்சி

By

Published : Jun 3, 2020, 3:45 PM IST

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி உருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்கு திரண்டு இருந்த கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்.

இதை தொடர்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, வேஷ்டி வழங்கினார். இந்த வகையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மொத்தம் 100 முன்னோடிகளுக்கு வேஷ்டி, பொற்கிழி வழங்கப்பட்டது.

பின்னர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் கரோனா தாக்குதல் காரணமாக அவரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டப்பட முடியவில்லை, எளிமையாக கொண்டாடப்பட்டது. அதுபோல கட்சியினருக்கு பொற்கிழி, வேஷ்டி அளித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் 10ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதியின் புகழை இந்த நாடு இருக்கும் வரை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது. இன்று அவரைப் பாராட்டி அனைத்து செய்தித்தாள்களிலும் செய்தி வந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே இதை எங்களிடம் கூறியுள்ளார். நான் மறைந்த பிறகும் எனது புகழ் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் என்று கூறினார். அது தற்போது நடந்து வருகிறது.

அதுபோல மழை வரும் நேரத்தில் தான் தமிழ்நாடு அரசு குடி மராமத்து பணிகளை மேற்கொள்கிறது. எப்போதுமே மழை பெய்யும் நேரம் அல்லது தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் தான் இத்தகைய திட்டங்களை அறிவிக்கின்றன. மண்ணில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அளக்கமுடியாது. மேலும் டெல்டா மாவட்டங்களில் கடைக்கோடி வரை 40 ஆயிரம் கிலோமீட்டர் வாய்க்கால் உள்ளது. இதை எல்லாம் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டிருந்தால் பயனுள்ள வகையில் இருந்திருக்கும். இதன் பலன் விவசாயிகளுக்கு கிடைத்து இருக்கும்” என்றார்.

இதைத்தொடர்ந்து திருச்சி உறையூர் பாண்டமங்கலம், கீரக்கொல்லைத் தெரு, திருச்சி மாவட்டம் தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் கே.என் நேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள், திருச்சி மாநகர செயலாளர், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் , மத்திய மாவட்ட பொறுப்பாளர், நிர்வாகிகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கே.என். நேரு மகன் அருண் நேரு திருச்சி மாவட்டம் கைக்குடி, முத்தரசநல்லூர், ஜீயபுரம், பெட்டவாய்த்தலை, அந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சியின் கொடியை ஏற்றிவைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையும் படிங்க:கருணாநிதியின் சாதனை சுவடுகள் என்றும் மறையாது - இயக்குநர் சுசீந்திரன்

ABOUT THE AUTHOR

...view details