திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 7ஆம் தேதி) ஒன்றியம், பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.