தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இப்படியே பேசினால் கமலை நடமாட விடமாட்டோம்..!' - மன்னார்குடி ஜீயர் மிரட்டல் - Kamal has received cash

திருச்சி : "ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டு கமல் இந்துகளுக்கு எதிராக பேசி வருகிறார். அவரை இந்து அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து நடமாட விடமாட்டோம்" என்று மன்னார்குடி ஜீயர் மிரட்டியுள்ளார்.

மன்னார்குடி ஜீயர்

By

Published : May 15, 2019, 11:48 PM IST

சென்டலங்கார மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோயில்களில் கலாச்சாரம் தெரியாத அதிகாரிகளை அகற்றப்படவேண்டும்.

ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் பலர் இன்னமும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் சாமி கும்பிட வரும் பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்து கொள்கின்றனர். திருப்பதியை விட ஸ்ரீரங்கத்தில்தான் அதிக அளவில் நகைகள் உள்ளன. ஆயினும் அவைகள் எங்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மன்னார்குடி ஜீயர் பேட்டி

நடிகர் கமல்ஹாசன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் பணம் பெற்றுக்கொண்டு இந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுடன் இணைந்து இந்துகளுக்கு விரோதமாக நடித்து வருகிறார். இதேநிலையில் அவர் இருந்தால் எல்லா இந்து அமைப்புகளும் இணைந்து கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம். அவர் செல்லும் இடமெல்லாம் அவரை அவமானப்படுத்தும் வகையில் எதிர்ப்பை தெரிவிப்போம். கமல் மட்டுமின்றி இந்துக்களுக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் அவர்களுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details