தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காஷ்மீரில் பாஜக அரசு ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியுள்ளது: காதர் மொய்தீன்..! - India Union Muslin League Leader

திருச்சி: பெரும்பானமை பலத்தை கையில் வைத்துக்கொண்டு காஷ்மீரில் பாஜக அரசு ஜனநாயகத்தை படுகொலையை நிகழ்த்தியுள்ளது என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் குற்றம்சாட்டியுள்ளார்.

காதர் மொய்தீன்

By

Published : Aug 6, 2019, 2:43 AM IST

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்று கருப்பு தினமாக அமைந்துவிட்டது. இந்திய தேர்தல் முறையை ஏற்றுக் கொண்டு, இந்திய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டு, இந்திய பிரதிநிதிகளாக விளங்கிய காஷ்மீர் மக்களை அவமானப்படுத்தும் வகையில், மத்திய பாஜக அரசு மிகக்கொடிய முறையில் அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்துள்ளது.

அதோடு அந்த மாநிலத்தில் 70 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டு இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து என்பது காஷ்மீர் மக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டதல்ல. நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, இமாச்சல் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாநிலத்திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

செய்தியாளர்களை சந்திக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன்

காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? காஷ்மீரில் பிரிவினைவாதம், பயங்கரவாதம் தலைதூக்கியதால் இத்தகைய நடவடிக்கை என்று மத்திய அரசு காரணம் கூறுகிறது. அப்படி பார்த்தால் பல மாநிலங்களில் நக்சலைட் அமைப்புகள் அதிக அளவில் கொடுமைசெய்துள்ளது.

இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக அந்தஸ்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு ஆக்கியுள்ளது ஜனநாயக படுகொலையாகும். தங்களது மாநிலத்தை பிரிக்ககோரி காஷ்மீர் மக்கள் கேட்டார்களா? காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை நீக்குவோம் என்ற பாஜகவின் கொள்கையை, பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சர்வாதிகாரதோடு ஜனநாயகப் படுகொலையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details