தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ஜுனியர் பேட்மிண்டன் லீக் தொடக்கம்!

திருச்சியில் ஜுனியர் பேட்மிண்டன் லீக்கை தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

Junior Badminton League start in Trichy
திருச்சியில் ஜுனியர் பேட்மின்டன் லீக் தொடக்கம்

By

Published : Jul 13, 2023, 11:11 AM IST

திருச்சி: ஜமால் முகமது கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டிகளை இந்தியா பேட்மிண்டன் சங்கத்தின் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாட்டின் பேட்மிண்டன் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (ஜூலை 12ஆம் தேதி) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் செயலாளரும் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் ஜுனியர் பேட்மிண்டன் லீக் தொடக்கம்

மேலும் கோலாகலமாக தொடங்கிய போட்டியில் 8 அணிகள், 88 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். அந்த 8 அணிகளை A மற்றும் B என 2 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. A பிரிவில் திருவாரூர் டெல்டா கிங்ஸ், சென்னை சிட்டி கேங்டேர்ஸ், விருதை வேங்கை, தஞ்சை தலைவாஸ் அணிகளும், B பிரிவில் திருச்சி தமிழ்வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், ரைன்போ ராக்கர்ஸ், மதுரை இண்டீயன்ஸ் அணிகளும், மோதிக் கொள்ள உள்ளது.

மேலும் இந்த போட்டி தினம்தோறும் காலை, மாலை என தொடர்ந்து நடைபெற உள்ளது. குறிப்பாக போட்டியானது 17 - 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள், ஆண்கள் இரு பிரிவினரும் இணைந்து விளையாடும் போட்டிகள் நடைபெறுகிறது. குறிப்பாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒற்றைப்பிரிவுக்கான 2 ஆட்டத்தில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணியும், விருதை வேங்கை அணியும் மோதியது.

தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 1 - 0 என்ற புள்ளி கணக்கில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணி வென்றது. அதேபோல் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் சமன் செய்தது.

மேலும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணியை வீழ்த்தி விருதை வேங்கை அணி வெற்றி பெற்றது. இதேபோல் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் அணியும், திருவாரூர் டெல்டா கிங்ஸ் அணியும் மோதியது. இதில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 0 - 1, இரட்டையர் பிரிவில் 0 - 2 என்ற புள்ளி கணக்கில் சென்னை சிட்டி கேங்டேர்ஸ் வெற்றி பெற்றது.

இதேபோல் 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான ஒற்றையர் பிரிவுக்கான 2 ஆட்டத்தில் ஒரு போட்டியில் சென்னையும், மற்றொரு ஆட்டத்தில் திருவாரூர் அணியும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் 2-0 என்ற புள்ளி கணக்கில் திருவாரூர் அணி வெற்றி பெற்றது.

குரூப் B அணி :முதல் போட்டியில் திருச்சி தலைவாஸ் அணியும், மதுரை இன்டீயன்ஸ் அணியும் மோதியது. இதில் 17 வயதிற்கான ஒற்றையர் பிரிவில் 0 - 1 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்றது. இரட்டையர் பிரிவில் இரு அணிகளும் சமன் செய்தது. 19 வயதிற்கான ஒற்றையர் பிரிவுக்கான 2 போடியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றது.

இதேபோல், இரட்டையர் பிரிவில் 2 - 0 என்ற புள்ளி கணக்கில் திருச்சி தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் வரும் 15 ஆம் தேதி மாலை போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் வெற்றி பெறும் அணிகளின் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: IND Vs WI : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதலாவது டெஸ்ட்... டாஸ் வென்று மே.தீவுகள் பேட்டிங்!

ABOUT THE AUTHOR

...view details