தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி ஓட்டுநர் வீட்டில் 25 பவுன் கொள்ளை - திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே லாரி ஓட்டுநர் வீட்டில் 25 பவுன் நகை , 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

லாரி ஓட்டுநர்
லாரி ஓட்டுநர்

By

Published : May 4, 2021, 12:38 PM IST

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். லாரி ஓட்டுநரான இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஹேமாவாணி என்ற மகளும், திலக் அமர்நாத் என்ற மகனும் உள்ளனர். இவருடைய மகன் சென்னையில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு(மே.03) பாஸ்கரும், அவருடைய மனைவியும் பின்பக்க கதவைப் பூட்டிவிட்டு, முன் பக்கத்தில் உள்ள வராண்டாவில் காற்றோட்டமாகத் தூங்கினர். இதனைத் தெரிந்த கொண்டு நள்ளிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 25 சவரன் தங்க நகைகள், 20 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றனர்.

நள்ளிரவு 3.30 மணி அளவில் பாத்ரூம் செல்வதற்காக எழுந்த பாஸ்கர், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக துறையூர் காவல் துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தர்.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற துறையூர் காவல் துறையினர், கைரேகை நிபுணர்களைக் கொண்டு சோதனை செய்தனர். மேலும் 25 சவரன் நகை கொள்ளையடித்தவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details