தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்புக்கு பயந்து பக்கத்து வீட்டில் தூங்கியவரின் வீட்டில் கொள்ளை! - திருச்சி தூங்கிக்கொண்டிருந்தவர் வீட்டில் கொள்ளை

திருச்சி: மணப்பாறை அருகே வீட்டிற்குள் பாம்பு புகுந்த பயத்தில் பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவரின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் நாகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

By

Published : Oct 6, 2019, 2:48 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த காட்டுப்பட்டி காமராஜர் நகரில் வசித்து வருபவர் லாரன்ஸின் மனைவி மரியசெல்வம். இவர் அருகே உள்ள உசிலம்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கல்லூரியிலிருந்து சுற்றுலாவுக்காகச் சென்றுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

இந்நிலையில், நேற்று இரவு தனியாக இருந்த மரியசெல்வம் வீட்டில் பாம்பு புகுந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அச்சத்தில் அவர் பக்கத்து வீட்டில் தூங்கியுள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 60 சவரன் நகை, 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காலையில் வீடு திரும்பிய மரியசெல்வம் தனது வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு, இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி - சென்னையில் துணிகர சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details