திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்தவர் நேதாஜி. இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக இருந்து, விருப்ப ஒய்வுபெற்று உள்ளார். அவரது 3 தம்பிகளுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவரது தம்பி தேவேந்திரனின், இரண்டாவது மகன் பாலாஜி என்பவருக்கு திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று காலை தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனால் இவரது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளனர். இந்த விழாவின்போது வீட்டில் பொருத்துப்பட்டுள்ள எமர்ஜென்சி சென்சார் மூலம் நேதாஜியின் மகள் செல்போனுக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உடனடியாக வீட்டிற்கு ஆளை அனுப்பி பார்த்துள்ளனர்.