திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் செய்ய திமுக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஆட்சி மாற்றம், பெயர் மாற்றம் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், அடிப்படை மாற்றம்தான் தேவை என்றும் கூறினார். வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றார்.
'அதிமுகவினர் தியானம் செய்ய ஜெயலலிதா சமாதி போதிமரம் அல்ல!'
திருச்சி: அதிமுகவினர் தியானம் செய்வதற்கு ஜெயலலிதா சமாதி ஒன்றும் போதி மரம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது மகனும் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவினர் தியானம் செய்ய ஜெயலலிதா சமாதி ஒன்றும் போதி மரம் அல்ல; அது ஒரு புதைகுழி என காட்டமாக விமர்சனம் செய்தார். மேலும் நீட் தேர்வு கூடாது என்பதே தங்களின் நிலைப்பாடு என திட்டவட்டமாகக் கூறினார்.
அதேபோல் உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால் ஊழலில் திளைக்கும் இந்தியாவும், நைஜீரியாவும்தான் இன்னமும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துகின்றன என குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்பு, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் மோடியின் ஐந்து விரல்களை போல் செயல்படுவதாக அவர் புகார் தெரிவித்தார்.