உலகம் முழுவதும் பேரிழப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் மேற்கொண்டு பரவுவதை தடுக்கும் விதமாக இன்று இந்தியா முழுவதும் பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வணிக வளாகங்கள், பூக்கடை வளாகங்கள், காய்கறி நிலையங்கள், பேருந்துகள் ஏதும் இயக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
மக்கள் ஊரடங்கு எதிரொலி : அமைதியான திருச்சி, மணப்பாறை! - கரோனா வைரஸ்
திருச்சி: ஊரடங்கை முன்னிட்டு பொதுமக்கள் யாரும் வெளியில் வராததால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன
![மக்கள் ஊரடங்கு எதிரொலி : அமைதியான திருச்சி, மணப்பாறை! Janta Crefew: People Didn't Came out From their Home due to Corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6502083-581-6502083-1584869645043.jpg)
Janta Crefew: People Didn't Came out From their Home due to Corona
அமைதியான திருச்சி,மணப்பாறை
அத்தியாவசிய தேவைக்கான பொருள்களை வாங்கவே மக்கள் வெளியே வருகிறார்கள். பிரசித்தி பெற்ற மணப்பாறை மாரியம்மன் கோவில், கோவில்பட்டி சாலை, மதுரை ரோடு ரவுண்டானா உள்ளிட்ட பல பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் வாகனங்களில் செல்லும் ஒரு சிலரிடமும் காவல்துறையினர் உரிய ஆலோசனைகளை வழங்கி வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:முட்டை சாப்பிட்டால் கரோனா பரவாது - ஓவியம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவி அசத்தல்!