தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் இந்திய மக்கள் நலச்சங்கம் சார்பில் திருச்சியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மதசார்பற்ற ஜனதா தள திருச்சி மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார், இந்திய மக்கள் நலச் சங்க சட்ட ஆலோசகர் மார்ட்டின் முன்னிலை வகித்தார், மதசார்பற்ற ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் ஜான்குமார், லோக் தந்திரி ஜனதாதள மாநில பொதுச் செயலாளர் ஹேமநாதன், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், மாநில நிர்வாகி வையாபுரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். மாநில பொதுச்செயலாளர் ஜான்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,