தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணப்பாறை அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு - ஏராளமான வீரர்கள் பங்கேற்பு - திருச்சி மாவட்டச் செய்திகள்

திருச்சி: மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த 600 காளைகளை அடக்க 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

-trichy
-trichy

By

Published : Feb 9, 2020, 10:25 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலயப்பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை வட்டாட்சியர் தமிழ்கனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளை வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, 600க்கும் மேற்பட்ட காளைகள் வரிசையாக சீறிப்பாய்ந்தன.

மணப்பாறை அருகே களைகட்டிய ஜல்லிக்கட்டு

அவற்றைப்பிடிக்க 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மிக்சி, குக்கர், கட்டில், பீரோ, சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அசம்பாவிதத்தைத் தவிர்க்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தைப்பூச திருவிழா: களைகட்டிய ஜல்லிக்கட்டு

ABOUT THE AUTHOR

...view details