திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் ஜல்லிக்கட்டுப்போட்டி இன்று காலை தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆர்டிஓ தவச்செல்வம் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், மதுரை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. மேலும் 420 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
முதலாவதாக முனியாண்டவர் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வரிசை முறையாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி கால்நடை துறை இணை இயக்குநர் மருதராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாடுகளுக்கு போதை பொருள் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர்.