திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள அதிமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார், 'ஓ.பன்னீர் செல்வம் தான் சார்ந்த சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் அவர் செய்ததில்லை. தற்போது அதிமுகவில் அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த 19 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அவர்களில் 2 பேர் தவிர மற்ற 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி சாதி, மதம் பாராமல் பணியாற்றுவார் என நம்புகிறோம்.
சசிகலா, டிடிவி தினகரன் தொண்டர்களின் ஆதரவை இழந்துவிட்டார்கள். ஓ.பி.எஸ்க்கும் தொண்டர்களின் ஆதரவு இல்லை. ஒட்டு மொத்த தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத் தான் உள்ளது.