திருச்சி:இந்திய ரயில்வே சுற்றுலாப் பிரிவின் IRCTC (Indian Railway Catering and Tourism Corporation), சிறப்பு ரயில், கல்வி சுற்றுலா, விமான பயணத் திட்டத்தை வகுத்து இந்தியா முழுவதும் சுற்றுலாக்களை அறிமுகப்படுத்தி அதனை நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில்
- காசி கயா சிறப்பு யாத்திரை: (காசி, கயா, அலகாபாத் மற்றும் அயோத்தியா) - 7 நாட்கள் சுற்றுலா சேவை, தனி நபர் ஒருவருக்கு ரூபாய் 40 ஆயிரத்து 500 ஆகும்.
- சார்தாம் யாத்திரை: (கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி, ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார்) - 13 நாட்கள் சுற்றுலா சேவை தனிபர் ஒருவருக்கு 68 ஆயிரத்து 150 ரூபாய் என இரண்டு சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சுற்றுலாவில் உள்ளடக்கியவை:
இந்த சேவையில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் விடுதி, உணவு, சுற்றுலா மேலாளர், பயண காப்பீடு, ஜிஎஸ்டி போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ஐஆர்சிடிசி முழுமையாக ஒத்துழைக்கும்.
காசி கயா சிறப்பு யாத்திரை:
வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி காலை 8.30 மணியளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் திருச்சியை வந்தடைகிறது.
நாள் 1 - திருச்சி - அயோத்தியா சென்றடைந்த உடன் இரவு தங்குதல்.
நாள் 2 - அயோத்தியாவில் உள்ள கோயில் மற்றும் ஆன்மிக சுற்றுலாத் தலங்களை பார்த்துவிட்டு இரவு அலகாபாத்தில் தங்குதல்.
நாள் 3 - அலகாபாத்தில் இருந்து வாரணாசி செல்லும் வழியில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பிறகு இரவு வாரணாசியில் தங்குதல்.
நாள் 4 - வாரணாசியில் உள்ள ஆன்மீக சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பிறகு இரவு மீண்டும் வாரணாசியில் தங்குதல்.
நாள் 5 - வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா சென்று இரவு தங்குதல்.
நாள் 6- கயா பகுதியில் உள்ள ஆன்மீகத் தலங்களை சுற்றி பார்த்துவிட்டு இரவு மீண்டும் கயாவில் தங்குதல்.
நாள் 7 - கயாவில் இருந்து புறப்பட்டு பாட்னா விமான நிலையம் சென்று அங்கு இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைதல்.
இந்த 7 நாள் சுற்றுலாவிற்கு தனி நபருக்கு 49 ஆயிரத்து 500 ரூபாய், இரண்டு பேர் என்றால் 81 ஆயிரம் ரூபாய், மூன்று பேர் என்றால் 1 லட்சத்து 15 ஆயிரத்து 800 ரூபாய் என பயண தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதே போன்று 13 நாட்களுக்கான சுற்றுலா வருகிற அக்டோபர் 27 அன்று திருச்சியில் இருந்து புறப்பட்டு நவம்பர் 8 அன்று மீண்டும் திருச்சி வந்தடைகிறது.
இதில் தனி நபருக்கு 80 ஆயிரத்து 900 ரூபாய் ஆகும். இந்த சுற்றுலா அனைத்தும் கரோனா விதிகளுக்கு உட்பட்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி செயல்படுத்தப்படும் என இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் ஐஆர்சிடிசி தெரிவித்து உள்ளது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண்களாக திருச்சி - 8287932070, மதுரை - 8287931977, 8287932122, சென்னை - 9003140682, 9003140680, 8287931964, இணையதளம் முகவரி - www.irctctourism.com மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:அரசு அறிவித்துள்ள மாதிரி பாடத்திட்டத்தினை திரும்பப்பெறக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்