திருச்சி:திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்காணலானது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று(ஏப்.11) தொடங்கியது. திருச்சியில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு 12,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான நேர்காணல் 11.04.2022 முதல் 13.04.2022 வரையிலும், 18.04.2022 மற்றும் 20.04.2022 முதல் 23.04.2022 வரை திருச்சி - புதுக்கோட்டை மெயின் ரோடு, கொட்டப்பட்டு பகுதியிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேர்காணலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.