தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலை நிறுத்தப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்கும்! - Intermediate Teachers Association latest

திருச்சி: ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்கும் என, அச்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Teachers Association meeting Trichy
Teachers Association meeting Trichy

By

Published : Jan 6, 2020, 12:06 PM IST

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சையது முதர்ஸா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் அப்பாத்துரை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 20 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில், புதிய தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்ய வேண்டும், அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

இதைத் தொடர்ந்து, அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றக்கோரி பிப்ரவரி 6ஆம் தேதி மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஜனவரி 8ஆம் தேதி நடக்கயிருக்கும் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ‘முறையற்ற செயலை செய்து அதிமுக வெற்றி’ - திருப்பூர் எம்.பி. விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details