திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் விஷ்வ இந்து பரிசத் மாவட்ட அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு தினந்தோறும் சுமார் 200 பேர் வரை அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
கடந்த ஆண்டு ஆடி அமாவாசை தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த அன்னதானம் ஓராண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று (ஜூன் 17) அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுமார் 150 முதல் 200 பேர் வரை தகுந்த இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து உணவு வாங்கி சாப்பிட்டனர்.
இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன் கூறுகையில், ”கடந்தாண்டு ஆடி அமாவாசை முதல் 100 முதல் 120 பேருக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது.
மேலும் கரோனா சமயத்தில் தினமும் 500 முதல் 6000 பேர் வரை இலவச உணவு வழங்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருப்பதால் 200 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க...மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தளர்வு: தலைமைச் செயலர் கடிதம்