திருச்சி மாவட்டத்தில் தற்போது 43 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட 65 வார்டுகளில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் 18 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் பகுதி வாரியாக வாகனங்களில் சென்று ஆய்வு செய்யும் பணிகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
திருச்சியில் கரோனா பரிசோதனை பணிகள் தீவிரம்! - வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் பணி
திருச்சி: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என்பது குறித்து வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
![திருச்சியில் கரோனா பரிசோதனை பணிகள் தீவிரம்! திருச்சியில் கரோனா ஆய்வு பணி தீவிரம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6775815-thumbnail-3x2-tricoronainspection.jpg)
திருச்சியில் கரோனா ஆய்வு பணி தீவிரம்!
திருச்சியில் கரோனா ஆய்வு பணிகள் தீவிரம்
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், “தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சளி, காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளார்களா? என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு மேற்கொள்ளும். தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்கு ஏதேனும் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...தடை உத்தரவு மீறல்: விழுப்புரத்தில் 3,174 வழக்குகள் பதிவு