தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாசில்தாரின் ஒரு மாத சம்பளத்தை ஏன் அபராதமாக விதிக்கக்கூடாது! - Trichy news

திருச்சி மாவட்டத்தில் மனுதாரருக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தாசில்தாரின் ஒரு மாத சம்பளத் தொகையை அபராதமாக விதித்து ஏன் இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது- நீதிபதி கேள்வி

உயர் நீதிமன்ற மதுரை கிளை
தாசில்தாரரின் ஒரு மாத சம்பளத்தை ஏன் அபராதமாக விதிக்கக்கூடாது!

By

Published : Apr 13, 2023, 12:09 PM IST

திருச்சி மாவட்டம்:மனு தாரருக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவு இடக்கோரிய வழக்கில் திருச்சியைச் சேர்ந்த தண்டாயுதம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் " திருச்சி மாவட்டத்தில் தான் வசித்து வருவதாக சொந்தமான 17 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எனக்கு சாதமாக கடந்து 2008 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அதன் அடிப்படையில் அதிகாரிகள் பட்டா வழங்க தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே எனது நிலத்திற்கு பட்டா வழங்க அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .எனவே மனுதாரரின் நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2014ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் ”மனுதாரரின் மனு குறித்து அதிகாரிகள் கடந்த 12 வருடங்களாக எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்றத்தில் எந்த வித அறிக்கையும் தாக்கல் செய்யாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். எனவே மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்யாத தாசில்தாரின் ஒரு மாத சம்பளத் தொகையை அபராதமாக விதித்து ஏன் இந்த நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் இந்த வழக்குத் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:ஓபிஎஸ்-ன் பிரம்மாஸ்திரம்.. கை கொடுப்பார்களா சசிகலா, டிடிவி.. திருச்சியில் மாநாடு வியூகம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details