திருச்சி: தஞ்சை மாவட்ட சுற்றுவட்டாரப்பகுதியினைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு, கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர், அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச்சென்று விட்டார்.
இந்நிலையில் அப்பகுதியைச்சேர்ந்த மூன்று இளைஞர்கள் இளம்பெண்ணுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், அப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தனது சாவுக்கு காரணம் அந்த மூன்று நபர்கள் தான் என அவர் கடிதம் எழுதி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றனர் என்றும்;