தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஜேகே விலகலால் திமுகவிற்கு எந்த நஷ்டமும் இல்லை:கே.என்.நேரு - மக்கள் நீதி மய்யம், போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, அதிமுக

திருச்சி: ஐஜேகே விலகிச் சென்றதால் திமுகவுக்கு நஷ்டமில்லை என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஐஜேகே விலகல் : ”பழையன கழிதல், புதியன புகுதல்”  கே.என். நேரு பேட்டி
ஐஜேகே விலகல் : ”பழையன கழிதல், புதியன புகுதல்” கே.என். நேரு பேட்டி

By

Published : Feb 27, 2021, 1:34 PM IST

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மட்டுமே திமுக மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை கூட்டணி கட்சிகளுடன் நடைபெற உள்ள கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

திறந்தவெளி மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தலைவர்களுடைய அறிக்கைகள் தயாரிப்பதில் தாமதமானதால் மட்டுமே மாநாடு தேதி தள்ளிப்போனது. ஐபேக் நெருக்கடியால் தாமதமாகவில்லை. கடந்த முறையும் இதே இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டபோது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

ஐஜேகே திமுக கூட்டணியில் இருந்து விலகியது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போல் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை, அவர்களுக்கு தான் நஷ்டம் என்று கூறினார்.

இதையும் படிங்க:சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து - தேசிய பசுமை தீா்ப்பாயம் அமைத்த குழு ஆய்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details