தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மத்திய மண்டலத்தில் 8 பாலியல் தொல்லை புகார்கள் பதிவு' - ஐஜி பாலகிருஷ்ணன்

மத்திய மண்டலத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக எட்டு புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஐ.ஜி.பாலகிருஷ்ணன்
ஐ.ஜி.பாலகிருஷ்ணன்

By

Published : Jun 18, 2021, 10:28 AM IST

திருச்சி: சென்னை தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் எழுந்த பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகளின் பாலியல் புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதனையடுத்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் நடைபெறும் பாலியல் புகார்கள் குறித்து, மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துவருகிறார்.

அதன்படி பாலியல் சீண்டல்களைத் தடுக்கும்பொருட்டு தனியார் பள்ளி முதல்வர்கள், தாளாளர்கள், தலைமையாசிரியர்களிடம் ஆன்லைன் மூலம் இன்று (ஜூன் 18), ஐஜி பாலகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் 225 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கட்டாயம் பதிவுசெய்து சேமித்துவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களிலும், தலா ஒரு காவல் ஆய்வாளர் அலைபேசி எண்ணானது பாலியல் தொடர்பான புகார் தெரிவிப்பதற்காக அறிவிக்கப்பட்டது.

இவற்றிற்கு தற்போது எட்டு புகார்கள் வந்துள்ளன. இதில் மயிலாடுதுறையிலிருந்து பெறப்பட்ட இரண்டு புகார்களின் அடிப்படையில், ஆசிரியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதர புகார்கள் உறவினர்கள், அருகில் வசிப்பவர்கள் மூலமாக பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுசெய்த கடையின் உரிமையாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details