தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் காவல்துறைதான் பொறுப்பு’ - அய்யாக்கண்ணு - தனக்கு கரோனா தொற்று இருந்தால் காவல்துறைதான் பொறுப்பு

திருச்சி: கரோனா தடுப்பு நடவடிக்கையின் போது காவல் துறையினர் தன்னை அலைக்கழிப்பதாகவும், தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு காவல் துறையினரே காரணம் எனவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.

If i have corona infection, the police are responsible said ayyakannu
If i have corona infection, the police are responsible said ayyakannu

By

Published : Mar 24, 2020, 5:40 PM IST

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உலகம் முழுவதும் கரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என பிரதமரும், முதலமைச்சரும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் புனித ஜோசப் கல்லூரி நிலப் பிரச்சினை தொடர்பாக புகாரளிக்கச் சென்ற தன்னை கடந்த மூன்று நாள்களாக கோட்டை காவல் துறையினர் அலைக்கழித்து வருகின்றனர்.

75 வயதாகும் தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தனக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மாநகரக் காவல் துறைதான் பொறுப்பு” என்று தெரிவித்தார்.

தனக்கு கரோனா தொற்று இருந்தால் காவல் துறைதான் பொறுப்பு

அதுமட்டுமின்றி, இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினரின் பத்து நாள் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தனக்கு கரோனா வைரஸ் அறிகுறியிருந்தால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'நாங்களும் தேர்தலில் நிற்கிறோம்..!' - அய்யாக்கண்ணு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details