தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்ப தகராறு: கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை! - அருண் பிரபு

திருச்சி: லால்குடி அருகே குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

குடும்ப தகராறால் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Apr 16, 2019, 3:18 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுதையூர் சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்தவர் அருண் பிரபு(31). இவர் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வழங்கும் எல்டி வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவரது முதல் மனைவி இறந்த நிலையில், 10 மாதங்களுக்கு முன்பு லால்குடி அருகே உள்ள செம்பரையைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் பிரதீபா(21) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த பிரதீபா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்து அவரது கணவர் வீடு திரும்பாத நிலையில், லால்குடி அருகே தென்கலை காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை லால்குடி போலீசார் கண்டுபிடித்தனர்.

இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறால் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details