தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முக்கொம்பு பூங்காவில் தடை; வேதனை தெரிவிக்கும் மக்கள்

அரசின் இந்த அறிவிப்பால் எப்போதும் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நிறைந்திருக்கும் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

mukkombu dam
mukkombu dam

By

Published : Jan 14, 2021, 7:46 PM IST

Updated : Jan 14, 2021, 7:56 PM IST

திருச்சி: கடந்த 10 மாதங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பரவல் காரணமாக திருச்சி முக்கொம்பு பூங்காவில் பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்கள் கூட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த அறிவிப்பை அப்பகுதி மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம்....

கரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு 2021ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை புதிய உற்சாகத்தை கொடுக்கும் என்று நம்பி கொண்டிருந்த வேளையில், அந்த நம்பிக்கையை சோதித்துள்ளது தமிழக அரசின் அறிவிப்பு.

உலக தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட தடை விதித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு திருச்சி நகர மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால் எப்போதும் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என நிறைந்திருக்கும் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.பொங்கல் பண்டிகையின் போது திருச்சி நகர மக்கள் சந்திக்கும் முக்கிய பகுதியாக இருக்கும் முக்கொம்பு பூங்கா ஆள்நடமாட்டம் இன்றி இருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

முக்கொம்பு பூங்காவில் தடை

இதுகுறித்து பார்த்திபன் என்ற இளைஞர் கூறும்போது, கடந்த ஆறு மாத காலமாக கரோனா பரவலால் முக்கொம்பு பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. பின்னர் தீபாவளி, ஆடிப்பெருக்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் கரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகைக்கும் முக்கொம்பு பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளோம். தகுந்த இடைவெளியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட அரசு அனுமதி கொடுத்திருந்தால் மனதுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும் என்றார்.

உடற்பயிற்சியாளர் 'மிஸ்டர் இந்தியா' பிரபாகரன் கூறும்போது, கரோனா பரவல் காரணமாக முக்கொம்பு பூங்காவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இந்த விடுமுறை காலத்தை முறையாகப் பயன்படுத்தி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாவட்ட நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.இதேபோல் புயல் காற்றின்போது அழிந்து போன அரிய வகை மரக்கன்றுகளை மீண்டும் நடவேண்டும். பூங்காவின் பல பகுதிகளில் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனை கண்டறிந்து சுத்தப்படுத்த வேண்டும். இதுபோன்று செய்யும்போது சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு பூங்கா மிகவும் அழகாக இருக்கும் என்றார்.

முக்கொம்பு பூங்காவில் தடை; வேதனை தெரிவிக்கும் மக்கள்
Last Updated : Jan 14, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details