திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி நெடுஞ்சாலை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சாலையோரத்தில் இருந்த குடியிருப்பு, வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
இந்நிலையில், கடந்த ஓராண்டாக மீண்டும் பூதநாயகி அம்மன் கோயில் பகுதி முதல் பேருந்து நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளதாக கூறப்பட்டது. இவை பொதுமக்களின் நலனை பாதிக்கும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருப்பதாக நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.