திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி வனப்பகுதியில் மயில், குரங்கு, நரி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்த விலங்குகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும்.

இந்நிலையில், இன்று (மார்ச் 6) அதிகாலை மூன்று வயதுடைய ஆண் காட்டெருமை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முற்பட்டபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், காட்டெருமையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என சாலையோரங்களில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரை அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.