திருச்சி: புதுக்கோட்டையின் அய்யாவயலிலிருந்து, லால்குடி காட்டூர் கரும்பு சர்க்கரை ஆலைக்கு ரமேஷ் என்பவர் கனரக லாரி ஒன்றை இயக்கிவந்துள்ளார். லாரி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே வந்துகொண்டிருந்தபோது, பாலத்தின் வளைவில் லாரியை வளைக்க முடியாமல் ஓட்டுநர் சிரமப்பட்டுள்ளார். அப்போது அதிக அளவு பாரம் காரணமாக லாரியின் டிப்பர் உடைந்து சாலையில் கரும்புகள் கொட்டின.
அப்பகுதி அதிக போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் கொட்டிய கரும்புகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னரே போக்குவரத்து சீரானது.