திருச்சி: மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜூலை 4) ஆம் தேதி மாலை மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணப்பாறையில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. புத்தாநத்தம், வையம்பட்டி, மருங்காபுரி, துவரங்குறிச்சி,வளநாடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.